கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறக்கப்படும் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களினால் புரியப்பட்டதாக கூறப்படும் பகிடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் காலவரையின்றி மூடப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து அந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மருத்துவபீட மாணவர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது, பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மருத்துவபீடத்தை நாளை மீள திறக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.