கொழும்பு கரையோர பூங்கா மக்களிடம் கையளிப்பு

202

கொழும்பு கரையோர பூங்காவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களிடம் கையளித்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நகரை அண்டிய நகர அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உலக வங்கியின் நிதியுதவியில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள பேரை வாவியின் நீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி இதன்போது உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்த சமரசிங்ஹ, பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்ஹ என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

SHARE