சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக செயல்படும் ஹர்பஜன் சிங் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் போது தமிழில் அடிக்கடி டுவீட் செய்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் #BhajjiBlastWithCSK என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை ஹர்பஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழக வீரரான முரளிவிஜயை ஹர்பஜன் நேர்காணல் காண்கிறார்.
முரளிவிஜய் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் குறித்து ஹர்பஜனிடம் மனம் திறந்தார்.
இது குறித்து ஹர்பஜன் தனது டுவீட்டில், தியேட்டர்ல பட்டைய கெளப்புனா அது நம்ம இளைய தளபதி விஜய், கிரிக்கெட் பீல்ட்ல பொளந்து கட்டுனா அது தான் முரளி விஜய் என அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தியேட்டர்ல பட்டைய கெளப்புனா அது நம்ம இளைய தளபதி விஜய் கிரிக்கெட் பீல்ட்ல பொளந்து கட்டுனா அது தான் நம்ம மான்க் @mvj888 மனசு வீட்டு நிறைய விஷயங்கள் பேசிருக்காரு அது எல்லாம் தெரிஞ்சுக்க பாருங்க நம்ம #BhajjiBlastWithCSK“தமிழ் Subtitle” ல @ChennaiIPL @QuPlayTV https://t.co/VHoUh5iGBT
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 12, 2018