இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் விடைபெற்று செல்லும் போது அவருடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றது : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

192

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் விடைபெற்று செல்லும் போது அவருடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மையில் மஹிந்தவை சந்தித்த அடுல் கெசாப் “கோத்தபாய ராஜபக்ஜவின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதாகவும், கோத்தா ஜனாதிபதியாக அமெரிக்கா விரும்பாது” எனவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது. இலங்கையை விட்டு வெளியேறும் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதையோ, அவர் ஜனாதிபதியாவதை அமெரிக்கா அனுமதிக்காது என்று அடுல் கெசாப் என்னிடம் தெரிவித்ததாக வெளியான செய்திகளை நிராகரிக்கின்றேன்.

கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது பற்றி எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.” என மஹிந்த குறிப்பிடவில்லை.

SHARE