மஹிந்த அரசாங்கம் பற்றி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

211

நல்லாட்சி அரசாங்கம் ஒரு மாதம் பெற்றுக் கொண்ட கடனானது, மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ஓராண்டில் பெற்றுக் கொண்ட கடன் தொகையை விடவும் அதிகமானது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டில் மஹிந்த அரசாங்கம் ஓராண்டில் பெற்றுக் கொண்ட கடன் தொகையை விடவும், நல்லாட்சி அரசாங்கம் கடந்த மே மாதம் கூடுதல் கடனைப் பெற்றுக் கொண்டுள்ளது என சிங்கள ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் அரசாங்கம் 842 பில்லியன் ரூபா கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்த தொகையானது கடந்த 2014ம் ஆண்டில் மஹிந்த அராசங்கம் பெற்றுக் கொண்ட கடன் தெகாகையை விடவும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது கடுமையான வரிச் சுமையை திணித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

SHARE