வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

200
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருச்சோரூப தேர்ப்பவனியும் திருவிழாவும் இன்று (13) ஆலயத்தின் பங்குத்தந்தை ச.சத்தியராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருப்பலி பூஜை அதி வணக்கத்திற்குரிய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதன் பின்னர் புனித அந்தோனியாரின் திருச்சொருபம் தேர்ப்பவனியானது இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் வீதிவழியாக சென்று அங்கிருந்து கொரவப்பொத்தானை வீதியை அடைந்து மீண்டும் அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தது.
தேர் பவனியின் இறுதியில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசிர்வாதத்தை அருட்தந்தை ச.சத்தியராஜ் வழங்கியிருந்தார்.
புனித அந்தோனியார் ஆலயத்தின் பெரு விழாவில் பெருந்தொகையான பக்தர்களும் மற்றும் வவுனியா இறம்பைகுளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.
(Kanthan Guna)
SHARE