இலங்கையின் பல பகுதிகளில் இன்று அடைமழை

182

இலங்கையின் பல பகுதிகளில் இன்றையதினம் மழையுடனான காலநிலை நிலவும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிரதேசங்களில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தப் பகுதியில் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும், கடல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படுகின்ற ஆபத்து தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE