அண்டார்டிகா கண்டத்தின் பனிப்படலம் உருகும் வேகம், மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக உருகி வருகின்றன.
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அண்டார்டிகாவில் 3 டிரில்லியன் டன் அளவு பனி உருகியுள்ளதாகவும், இதன் காரணமாக கடல் மட்டம் உயரவும், கடற்கரையோர பகுதிகள் கடும் பாதிப்படையவும் வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த பனிப்பாறைகளின் உருகும் வேகம் தற்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, கடந்த 2012ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 76 பில்லியன் டன் பனி உருகி வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 219 பில்லியன் டன் என பனி உருகும் என கூறப்படுகிறது.
இதன் மூலம், உலக வெப்பமயதாலை கட்டுப்படுத்த விடுக்கப்பட்டுள்ள மற்றுமொறு எச்சரிக்கை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொழிற்சாலைகள் வெளியிடும் வெப்பத்தின் அளவு இதே அளவு நீடித்தால், இந்த நூற்றாண்டின் முடிவில் மொத்த பனியும் அண்டார்டிகாவில் உருக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
