உலகின் சக்திவாய்ந்த கணினிகள்

257

உலகின் சக்திவாய்ந்த கணினிகள் யாரிடம் இருக்கிறது என்பது குறித்து பல நாடுகளிடையே பெரும் போட்டியே நடக்கிறது.

இந்த பந்தயத்தில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சீனாவை, தற்போதைக்கு, அமெரிக்கா முந்தியிருக்கிறது.

அமெரிக்க சக்தித் துறையின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் (ஓ.ஆர்.என்.எல்.) அண்மையில், ‘சம்மிட்’ அதி திறன் கணினியை பயன்படுத்தத் துவங்கியுள்ளது.

கணினி உலக அளவையின்படி, சம்மிட் அதிதிறன் கணினியின் செயல் வேகம் 200 பெட்டா பிளாப். வினாடிக்கு இரண்டு லட்சம் ட்ரில்லியன் கணக்குகளைப் போடக்கூடியது சம்மிட்.

இதற்கு முன் அமெரிக்கா, 2012ல் செயல்படுத்தத் துவங்கிய, டைட்டன் என்ற கணினியின் வேகம் 27 பெட்டாபிளாப். சரி, ஏற்கனவே அதிதிறன் கணினிகளை வைத்திருக்கும் நாடுகள், ஏன் மேலும் திறன் மிக்க கணினிகளை நாடுகின்றன… இதற்கு விஞ்ஞானிகள் தரும் விளக்கம் சுவையானது.

அதிதிறன் கணினிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி களின் முடிவுகளை சரிபார்க்க வேண்டும் என்றால், அந்த முடிவுகளைத் தந்த கணினிகளைவிட மிகுந்த திறன் படைத்தவையாக இருக்கவேண்டும்!

SHARE