மன்னார் ஊடகவியலாளர் அமையம்
கடந்த சில மாதங்களாக முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்திலும் வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு ஒழுங்கான ஊடக சுகந்திரம் வழங்கப்படவில்லை.
அண்மையில் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் ராணுவ புலனாய்வு துறையினரால், தனியார் நிறுவனத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த தமிழ் ஊடகவியலாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பட்சத்தில் ஒட்டு மொத்த தமிழ் ஊடகவியலாளர்களும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை வரும்.
எனவே இதுவரை அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மேல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும், இலங்கை முழுவதும் உள்ள ஒட்டு மொத்த ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் அதற்கு அப்பால் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்மாறான விளைவுகள் ஏற்படாமல் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து கொள்கின்றோம்.
நன்றி