புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார மாநகரசபை உறுப்பினரின் வட்டாரப் பணிமனை திறப்பு

190

வட்டார மக்களின் நண்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வட்டார பணிமனை இன்றைய தினம் 03ம் குறுக்குத் தெருவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் கழக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

  

  

புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் தலைவர் கிசாந்தன் அவர்களினால் அலுவலகத்தின் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், கழகத்தின் முன்னாள் தலைவரும், ஆலோசகருமான சனத்குமார் அவர்களினால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் வட்டார மாநகரசபை உறுப்பினர் கிருரஜன் அவர்கள் விளக்கேற்றி நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

வட்டார மக்களுக்கான செயற்பாடுகளை செம்மைப் படுத்தும் நோக்குடன் அவர்களின் விடயங்கள் தொடர்பில் பல்வேறு செயற்பாடுகள் இவ் அலுவலகத்தில் இடம்பெறும். தினமும் இவ் அலுவலகம் திறக்கப்படுவதோடு, தொலைபேசி மூலமும் தொடர்பினை ஏற்படுத்த முடியும். மக்களின் சேவை கருதியே இவ்வலுவலகம் செயற்படும் என்று இதன்போது மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE