பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் அவ்வப்போது தடைப்படுவதாக குற்றச்சாட்டு

249

பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் அவ்வப்போது தடைப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

இதனை பேஸ்புக் நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

170.0 பதிப்பு மெசஞ்சர் அப்பிளிக்கேஷனே இவ்வாறு தடைப்படுகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு இக் குறைபாட்டினை நீக்கியதாக 170.1 மெசஞ்சர் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப் பதிப்பில் தடைப்படல் குறைபாடு நீக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

எவ்வாறெனினும் ஐபோன் மற்றும் ஐபேட் பாவனையாளர்களுக்கு மாத்திரமே இக் குறைபாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE