புதிய நீதவான் ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் அகழ்வுப்பணி 

169
மன்னார் நகர் நிருபர்
மன்னாரில் இடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்  மீண்டும்  விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பம்.
மன்னார் நகர நுழைவாயிலில்   உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித  எலும்புகள் அகழ்வு பணிகள்  (18) திங்கட்கிழமை 15 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
  
  
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் பெற்று மல்லாகம் நீதி மன்றத்திற்குச் சென்றுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு புதிய நீதிபதியாக ஹெப்பட்டிக்கொல்லாவ மாவட்ட நீதிபதி ரி.ஜெ.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை (18) காலை 7.30 மணியளவில் 15 ஆவது தடவையாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டனர்.
இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்; என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.தொடர்ச்சியாக அகழ்வு பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றது.
இன்று திங்கட்கிழமை (18) மாலை 4.45 மணியளவில் மன்னார் மாவட்ட புதிய நீதவான் ரி.ஜே.பிராபாகரன் குறித்த பகுதிக்குச் சென்று அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட்டதோடு, விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
நாளைய தினம் குறிப்பிட்ட அகழ்வுபணி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது அத்துடன் நாளைய தினம் இவ் அகழ்வு பணிக்காக மேலதிக உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டு அகழ்வு பணியில் இணைக்கப்பட்டுள்ளனர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SHARE