கொழும்பு கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் பலி சிசிரிவி கமரா காட்சிகள்

165

கொழும்பு கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த விபத்து தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் மோட்டார் வாகனத்துடன், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி மோட்டார் வாகனத்துடன் மோதும் காட்சி கமரா ஒன்றில் பதிவாகியிருந்தது.

சம்பவத்தில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவருமே பயணித்துள்ளனர்.

படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான சிரான் இசுரு என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞனின் காதலி மற்றும் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE