சிறுவர்களை பாதுகாப்போம்” என்று உதட்டளவில் சொல்லிக் கொண்டு விழா நடாத்தும் அரசியல் கணவான்களே!!!

207

 

சிறுவர்களை பாதுகாப்போம்” என்று உதட்டளவில் சொல்லிக் கொண்டு விழா நடாத்தும் அரசியல் கணவான்களே!!!

வெற்றிலையும், மனுவுடன் காத்திருந்த இந்த குழந்தைகள் என்ன ஆப்பிரிக்க நாட்டு அடிமைகளாக??

இக் குழந்தைகளை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து சென்று அவர்களின் மனுவை ஜனாதிபதியிடம் கையளிக்க உங்களுக்கு நேரம் இல்லை என்பது உண்மை ஆனால் தேடிவந்த ஜனாதிபதியிடம் ஏன் இந்த குழந்தைகளை அழைத்து செல்லவில்லை???

ஜனாதிபதி வருகை தந்தது “சிறுவர்களை பாதுகாப்போம்” என்ற நிகழ்வுக்கு என்பதை ஏன் மறந்தீர்கள்

தனிமையில் சந்தித்து மனு கொடுப்பதைவிட 1000 பேருக்கு முன்னால் கொடுத்திருந்தால் ஜனாதிபதியின் கவனத்தில் அது பதிந்திருக்கும் என்பதை ஏன் மறந்தீர்கள்???

இதே இவர்கள் உங்கள் உறவுகளாகவோ அல்லது செல்வந்தர்களாக இருந்திருந்தால் உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என்ன செய்ய அவர்கள் ஏழைகள் என்பதே காரணமோ???

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டால் போதாது மனம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதை மறந்தது ஏன்???

SHARE