யாழ்ப்பாண இளைஞர்களை சுட்டுக்கொல்ல களமிறக்கப்பட்டுள்ள இரகசிய மோட்டார் உந்துருளி அதிரடிப்படை.

200

 

யாழ்ப்பாண இளைஞர்களை சுட்டுக்கொல்ல களமிறக்கப்பட்டுள்ள இரகசிய மோட்டார் உந்துருளி அதிரடிப்படை.

யாழ்ப்பாணத்தை தொடர் இராணுவ முற்றுகைக்குள் வைத்திருப்பதற்காக மகிந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட கிறீஸ் பூதம் மற்றும் ஆவாக் குழுக்கள் கோத்தபாயவின் தலைமையிலேயே வழிநடத்தப்பட்டிருந்தது.

கிறீஸ் பூதத்தைச் சேர்ந்த ஒருவரை மக்கள் மடக்கிப்பிடத்ததைத் தொடர்ந்து அவர் தப்பியோடி இராணுவ முகாமிற்குள் நுளைந்ததும் அதனை இராணுவம் மூடிமறைக்க முயன்று தோற்றுப்போனதும் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்.அதன் பின்னர் அது முடிவிற்கு வந்தது.ஆனால் அது ஆவா குழுவாக மாற்றமடைந்தது.

இது குறிப்பாக தென்னிலங்கை சிங்களவர்கள் தமிழர் பகுதிகளில் கட்டியெழுப்பும் பொருளாதபலத்தையும் சிங்கள மயமாக்கலையும் விரும்பாத அல்லது எதிர்த்துக்குரல் கொடுக்கும் தமிழர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களை வேறு தனிப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி வாள்வெட்டுக்களில் உயிரெடுப்பதற்காகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

2009 இறுதிப்போரின் பின்னர், தமிழர் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள படையினரை விலக்கும்படி சர்வதேச அழுத்தங்கள் எழுந்துவருவதும் அதற்கு காரணம் இராணுவம் மக்களை அச்சுறுத்தி கொலைகளில் ,கடத்தல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது எனும் குற்றச்சாட்டும் ஆகும்.எனவே படைவிலகலை தடுப்பதற்கும் அதேவேளை சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்கும் தமது இனப்படுகொலை இராணுவத்தை புனிதவான்களாக காட்டுவதற்காகவும் சிறிலங்கா அரச புலனாய்வு உள்ளூர் கழுசறைகளையும்,காவாலிகளையும் கொண்டு ஏற்படுத்திய மாற்று சக்தியே இந்த ஆவாக் குழுக்கள்.

அண்மையில் யாழ் மல்லாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஆவாக் குழுவை நோக்கி நடத்தப்பட்டதாகவும்,கொல்லப்பட்டவர் ஆவா குழுவைச்சேர்ந்தவர் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சால் தெரிவிக்கப்பட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிடப்பட்டிருந்தது.ஆனால் தமிழ் ஊடகங்கள் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தும் அவையெதுவும் உலகின் காதுகளை எட்டியதாக தெரியவில்லை. அதற்கும் ஒரு மாபெரும் போராட்டம் ஒன்றை புலம்பெயர் மக்களே மேற்கொண்டு உலகிற்கு வெளிப்படுத்தினால் மட்டுமே உலகின் கண்களுக்கு இவைபற்றிய உண்மைகள் தெரியவரும்.

இந்த ஆவாக்குழுக்களே யாழில் தங்கியிருக்கும் தென்னிலங்கைச் சிங்களவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது.தமிழர் பகுதிகளில் வடக்கு கிழக்கு தமிழரின் பொருளாதார நகரமான யாழ்நகரை மையப்படுத்தி தமிழரின் பொருளாதாரபலத்தை சிதைக்கும் நோக்கில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்துவது.
தமிழர் காணிகளை வர்த்தக நிலையங்களை பேரம்பேசி விற்பதற்கு நிர்பபந்தப்படுத்தி சிங்களவர்களுக்கு பெற்றுக்கொடுத்தல்,
புத்தவிகாரைகள் நிறுவப்படும் காணி உரிமையாளர்கள் அல்லது அரசகாணியெனில் அதற்கு எதிராக குரலெழுப்பும் உள்ளூர் பிரமுகர்களை அச்சுறுத்தி அடக்குதல்,

இளையோர்களுக்கு கஞ்சாவை விற்று அவர்களை போதைக்கு அடிமையாக்குதல்,
பாலியல் விபச்சார நிலையங்களை இரகசியமாக நடத்தி இளைய சமுதாயத்தை சீர்கெடுத்தல்.அது நடத்துபவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தல்,பொலிசிற்கு தகவல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி தமக்கும் பொலிசிற்கும் சம்பந்தமில்லையென மக்களை நம்பவைத்து ஏமாற்றுவதென இவர்களது அட்டகாசங்கள் ஆங்காங்கே தலைவிரித்தாடுகிறது.
ஒருசில அரசியல்வாதிகளே ஆவாக்குழுமூலம் தமது தனிப்பட்ட பிரச்சினைகளைக் காயாள முற்பட்டுவரும்போது தமிழ் மக்களுக்கு எப்படி ஆவாக் குழுவின் அடாவடித்தனங்களிலிருந்து தீர்வு கிடைக்கப்போகிறது.

இப்பொழுது ஆவாக் குழுவை அடக்குவதாக கூறி யாழ்ப்பாணத்தில் இரகசிய மோட்டார் உந்துருளிப் படையணி களமிறக்கப்பட்டுள்ளது.இதையும் உலகம் வாயைப்பிளந்து நம்பத்தான் போகிறது.
எமது அரசியல் கூழ்முட்டைவாதிகளும் வழமைபோல் அரசிற்கு முண்டுகொடுக்கத் தயாராகி நல்லாட்சி என்று சான்றிதழ் வழங்குவர்.அதைத்தான் யாழ் நீதிபதி ஐயாவே சொல்லிவிட்டார்.அவருக்குத் தெரியாத சட்டமா மக்களே.! விழிப்புடன் செயற்படுங்கள்!
இளைய தலைமுறையே அழிவிலிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தயார் நிலையெடு.!

SHARE