உலகிலேயே உள்ள சூப்பர் கணினிகளுள் அதிக வேகமாக செயற்படக்கூடிய புதிய கணினியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர்.
இக் கணினியானது ஒரு செக்கனில் 200,000 ட்ரில்லியன் கணிப்புக்களை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் 10 பீட்டா பைட் சேமிப்புக் கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.
Summit எனப்பெயிரிடப்பட்டுள்ள இக் கணினியானது மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய ஆராய்ச்சிகளில் இக் கணினி ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.