திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!
சென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.
- இப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா?
- அடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்?
- இல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,
- பாடி கேட்பரோ,
- இல்லை பறித்தே விடுவரோ?
செக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.
- திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
- இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
- அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].
- வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
- ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
- அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].
இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா?
சென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.
இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.
எதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.
பொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.
Even in the societal mainstream, there are a significant number of people who see nothing wrong in engaging in premarital sex. Notions of social morality are inherently subjective and the criminal law cannot be used as a means to unduly interfere with the domain of personal autonomy. Morality and Criminality are not co-extensive[6]. |
சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.
According to me, sex is not only concerned with the body; but also concerned with the conscious. I could not understand matters such as changing boyfriends every week. When a girl is committed to her boyfriend, she can tell her parents and go out with him. When their daughter is having a serious relationship, the parents should allow the same. Our society should come out of the thinking that at the time of the marriage, the girls should be with virginity. None of the educated men, will expect that the girl whom they are marrying should be with virginity. But when having sexual relationship the girls should protect themselves from conceiving and getting venereal diseases[7]. |
மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.
இவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்!
18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே? அதற்கென்ன செய்வது? முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்?
- வசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே?
- பப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே?
- மதுக்கடைகளில் அவர்களும் இருக்கின்றனரே?
- பேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே?
- சைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே?
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.
இந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ?