1990களில் இஸ்ரேலின் வலுசக்தி அமைச்சராக இருந்த மருத்துவர் ஒருவரான கொனேன் செகெவ், தான் நைஜீரியாவில் வாழ்ந்த காலத்தில் இஸ்ரேல் உளவுப் பிரிவுக்காக வேலை பார்த்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எகுவடோரியல் கினியாவுக்கு கடந்த மே மாதம் பயணம் செய்தபோது கைது செய்யப்பட்டிருக்கும் அவர் இஸ்ரேலிய பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இஸ்ரேலுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டில் இராஜதந்திர கடவுச்சீட்டில் போதைப்பொருட்கள் கடத்திய குற்றச்சாட்டில் 62 வயதான செகெவ், ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு முகம்கொடுத்தார்.
அவரது மருத்து அனுமதிப்பத்திரம் நீக்கப்பட்ட நிலையில் 2007 ஆம் ஆண்டு சிறையில் இருந்த விடுதலை பெற்ற பின் நைஜீரியா சென்று மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த மாதம் இஸ்ரேலை வந்தடைந்த செகெவ் உடன் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு சேவையான ஷின் பெட் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் உளவுப் பிரிவால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அதன் செயற்பாடுகளில் உதவிகள் புரிந்தது குறித்த தகவல்கள் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டபோது தெரியவந்ததாக ஷின் பெட் குறிப்பிட்டுள்ளது.