
தடைப்பட்டுள்ள இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதித் திட்டம், ஜெரூசலம் விவகாரம் ஆகியவை குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
2014ஆம் ஆண்டுக்கு பின்னர் நெதன்யாகு ஜோர்தான் சென்றது இதுவே முதன்முறையாகும். ஜோர்தானும், எகிப்தும் மட்டுமே இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டுள்ள அரபு நாடுகளாகும்.
ஜோர்தானிய மன்னர் தனிப் பாலஸ்தீனம் உருவாவது குறித்து வலியுறுத்தியதாக அரண்மனைத் தகவல்கள் கூறின.
பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் ஏற்பட அதுவே சிறந்த வழி என்று இஸ்ரேலிய பிரதமரிடம் மன்னர் அப்துல்லா கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.