அமெரிக்க இராணுவத்தின் ஆறாவது படைப்பிரிவாக ‘விண்வெளி படையை’ உருவாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு.

186

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், “அமெரிக்கா வெறுமனே விண்வெளியில் இருப்பைக் கொண்டிருப்பது போதுமானதாக இருக்காது. நாம் கண்டிப்பாக விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் ஆறாவது படைப்பிரிவாக ‘விண்வெளி படையை’ உருவாக்குமாறு அந்நாட்டு இராணுவத்துக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
  “ஆறாவது விண் வெளிப்படையை நாம் உடனடியாக உருவாக்க வேண்டும். அது குறித்து இராணுவம் மற்றும் பென்டகனுக்கு நான் உத்தரவிடுகிறேன். நம்மிடம் ஏற்கனவே விமானப்படை உள்ளது. இருந்தாலும் தற்போது விண்வெளிப்படையும் அமைக்கப்படுகிறது. இரண்டும் தனித் தனியானது. ஆனால் இரண்டும் சம வலிமைமிக்கது” என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அமெரிக்காவில் புதிய இராணுவக் கிளை ஒன்று உருவாக்கப்படுவதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE