தமிழ் சினிமாவின் முதல் ஸ்பேஸ் படம் என்று டிக் டிக் டிக் படத்தை விளம்பரம் செய்து வருகின்றனர். இது 99% உண்மையும் கூட.
ஆனால், 1% ஏன் இல்லை என்றால், 1963-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் கலையரசி என்ற படம் வெளிவந்தது.
இப்படத்தில் ஒரு சில மணி நேர காட்சிகள் எம்.ஜி.ஆர் ஸ்பேஸில் மாட்டிக்கொள்வது போல் வரும்.
அங்கிருந்து அவர் எப்படி தப்பித்து வருகின்றார் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக எடுத்திருப்பார்கள்.
இப்படி 1963-லேயே ஸ்பேஸ் கதைக்களத்தில் கலக்கியது தமிழ் சினிமா தான்.