சிங்கள பயங்கரவாத அரசினால் தடை.!! வெளிநாடுகளில் உள்ள 8 அமைப்புக்கள் உட்பட 86 தமிழர்களுக்கு இலங்கையில் உள் நுழைய தடை

175

 

சிங்கள பயங்கரவாத அரசினால் தடை.!!

வெளிநாடுகளில் உள்ள 8 அமைப்புக்கள் உட்பட 86 தமிழர்களுக்கு இலங்கையில் உள் நுழைய தடை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (ரிஆர்ஓ), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (ரிசிசி) உள்ளிட்ட 8 அமைப்புக்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட 14 தமிழர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்த 14 தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிடப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழும் 86 தனி நபர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் இணைத்து புலம்பெயர் நாடுகளில் வாழும் 100 பேர் இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No automatic alt text available.
SHARE