கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள்

132

அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும், எதிர்வரும் வாரம் முதல் கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்படும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அடுத்த வாரம் முதல் பங்கேற்பதற்கு 16 பேரைக் கொண்ட குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இந்த விடயம் குறித்து கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர்கள் சாதகமான பதிலை வழங்கியுள்ளனர்.

16 பேரைக் கொண்ட குழுவினர் தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியின் ஒரு சிலர் மாறுபட்ட கருத்து வெளியிட்டு வரும் போதிலும் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் தம்முடன் நெருங்கிச் செயற்படுவதாக ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமாயின் 16 பேரைக் கொண்ட குழுவினர் கூட்டு எதிர்க் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் குறித்து தீர்மானித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

SHARE