குளிக்க சென்ற சிறுவனை காணவில்லை

150

அம்பலந்தொட – ரிதியகம, 5ஆம் கட்டை பகுதியில் வளவை ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் இன்று பிற்பகல் கல்தொடுபல பகுதியில் குளிக்க சென்ற போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிதியகம, பொலியர்வத்த பகுதியை சேர்ந்த 10 வயதுடைய எம்.பீ நெத்மின நிர்மான எனும் சிறுவனே காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் அம்பலந்தொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும், பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE