தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். தன் திறமையால் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணியில் இருந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை குட்டி பத்மினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிறு குழந்தையாக இருந்த போதே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர்.
இவர் தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கும் கைதிகள் மன அமைதி பெற தியான பயிற்சி, பகவத் கீதை உபதேசம் என நல்ல விசயங்களை செய்து வருகிறாராம்.
அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியிருக்கிறார். அதை தன் மறைவிற்கு பிறகு புத்தகமாக வெளியிட வேண்டும் என தன் மகளிடம் கூறியிருக்கிறாராம்.