நூற்றுக்கணக்கான சுவிட்சர்லாந்து ரயில் பயணிகள் புகார்: சுவாரஸ்ய காரணம்

192

ரயில் பழுதாகி நின்றதால் தங்களால் சுவிட்சர்லாந்து பங்குபெறும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியைக் காண முடியாமல் போனதாக நூற்றுக்கணக்கான சுவிட்சர்லாந்து ரயில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த ரயில் சூரிச்சிலிருந்து பெர்னுக்கு சென்று கொண்டிருந்தது, என்றாலும் அது Mattstetten என்னும் சிறிய நகரத்தில் நிற்க வேண்டியதாயிற்று.

பழுதாகி நின்ற ரயிலுக்கு பதிலாக இன்னொரு ரயில் அனுப்பப்பட்டாலும் அது மிகவும் சிறிய ரயிலாக இருந்ததால் அதில் கொஞ்சம் பேர் மட்டுமே ஏற முடிந்தது. மீதி பலர் அந்த நகரத்திலேயே பின் தங்க வேண்டியதாயிற்று.

அதுமட்டுமின்றி Mattstetten நகரின் Wi-Fi நெட்வொர்க்கும் நிரம்பி வழிந்ததால் தங்கள் மொபைல் போன்களில்கூட ரசிகர்களால் கால் பந்தாட்டப் போட்டியைக் காண முடியாமல் போனது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பிரேக்கில் ஏற்பட்ட பிரச்சினையால்தான் ரயில் பழுதாகி நின்றதாகத் தெரிவித்த சுவிஸ் ரயில்வே செய்தி தொடர்பாளர், பயணிகளுக்கு சற்று அசௌகரியம் ஏற்பட்டாலும் அவர்கள் எப்போதுமே பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.

SHARE