தபால் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன

409

தபால் விவகார மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு தபால் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

தபால் கட்டணங்களை கடந்த 15ம் திகதி முதல் அதிகரிப்பது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சாதாரண தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்கள் ஐந்து ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

தபால் அட்டை ஒன்றின் விலை 8 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. டெலி மெயிலின் முதல் பத்து சொற்களுக்கான கட்டணங்கள் 20 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

தபால் ஊழியர் சம்பளங்கள், போக்குவரத்து மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் நோக்கில் கட்டண அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் பணியாளர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE