விளையாட்டுத் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி வங்கியில் பணம் கொள்ளையிட்டவர் கைது

156

விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றை காண்பித்து வங்கி பணியாளர்களை அச்சுறுத்தி வங்கியில் பணம் கொள்ளையிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொட்டாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அரசாங்க வங்கியொன்றில் குறித்த நபர் 77500 ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளார். கொள்ளையிடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், தலைக் கவசம், விளையாட்டுத் துப்பாக்கி என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயதான சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிட்ட பணத்தில் 40,000 ரூபாவும் மீட்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டிச்சாலை ஒன்றை நடத்திச் சென்ற சந்தேக நபர் பல்வேறு நபர்களிடம் கடன் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த கடன்களை மீளச் செலுத்தும் நோக்கில் வங்கியில் பணம் கொள்ளையிட்டதாக சந்தேக நபர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

கொட்டாவ பிரதேசத்தில் விளையாட்டுப் பொருள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் 350 ரூபா கொடுத்து விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்து, இந்த கொள்ளையின் போது பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE