கொழும்பு பம்பலபிட்டிய மெதடிஸ்ட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார் சிறப்பு அதிதிகளாக மேல் மாகாண உதவி கல்வி பணிப்பாளர் ஆர். உதயகுமார் உட்பட பெற்றோர்கள் நலன் விரும்;பிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்வில் மாணவர்களின் பெபேறுகள் அதிகரிப்பிற்கும் பெறுபேறுகள் 100 வீதம் பெறுவதற்கும் காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி இராஜாங்க அமைச்சரினால் கௌரவிக்கபட்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.