அமலாபாலின் முதல் காதலர் இவர் தானாம்… !

162

பிரபல இயக்குனரான விஜய்யை காதலித்து திருமணம் செய்து ஒருசில மாதங்களிலேயே விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் தனது முதல் காதலர் யார் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அமலாபால் தனக்கு ஏற்பட்ட முதல் காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். தன்னுடைய முதல் காதலன் நடிகர் மாதவன் என்றும் அவர் மீது இப்போதும் தனக்கு மரியாதை உண்டு என்றும் கூறினார்.

மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், ‘‘எல்லோருக்கும் வாழ்வில் முதல் காதல் வந்திருக்கும். எனக்கும் முதல் காதல் இருந்தது. நான் காதலித்தது வேறுயாரையுமல்ல. நடிகர் மாதவனைத்தான். சிறுவயதிலிருந்தே அவர் மீது எனக்கு காதல் உண்டு’’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாதவனும் கலந்து கொண்டிருந்தார் என்பதும் அமலாபால் கூறியதை கேட்டு அவர் ஆச்சரியத்தில் புன்னகைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாதவன், அமலாபால் ஆகிய இருவரும் ‘வேட்டை’ படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE