புலிக்கு தாயான இளம்பெண்! ஆச்சரியப்படுத்தும் வீடியோ

158

இந்தோனேசியாவில் புலிக்கும், அதனை பராமரிப்பவருக்கும் இடையேயான நட்பு அனைவரையும் ஆச்சிரியத்தில் நெகிழ வைத்து இருக்கிறது. இந்தோனேசியா நாட்டில் 35 வயதான அப்துல்லா ஷோலே என்ற பெண், 10 வயதான வங்கப் புலியும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள். இருவரும் 24 மணி நேரமும் இணைந்தே விளையாடுகிறார்கள்.

இரண்டும் பேரும் எப்போது பிரியாமல் இருக்கிறார்கள். சாப்பிடுவதில் தொடங்கி உறங்குவது வரை ஒன்றாகத்தான் செய்கிறார்கள்.

அந்த பெண் புலியின் பெயர் முலன் ஜமீலா. அது 3 மாத குட்டியில் இருந்து அப்துல்லா பராமரித்து வருகிறார். அவள் அந்த புலியின் மீது செலுத்திய அன்பும், அக்கறையும் இருவரையும் பிரிக்க முடியாத அளவுக்கு மாற்றியிருக்கிறது.

அந்த பெண் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் புலி மிகவும் வருத்தப்படுமாம் . அதற்காகவே அந்த பெண் வீட்டிற்கு செல்லாமல் புலி கூடவே தங்க ஆரம்பித்தாள்.

இவர்கள் இப்படி ஒன்றாக விளையாடி வருவது அனைத்து மக்களையும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE