அண்மைக்காலமாக கொழும்பில் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்படும் சம்பவம்.

165

அண்மைக்காலமாக கொழும்பில் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்படும் சம்பவம் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இன்று காலை இரத்மலானையில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடு ஒன்றிற்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ கொப்ரல் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கை பகுதியிலேயே காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் கர்ணல் ஒருவரின் வீட்டிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கொட்டாஞ்சேனையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு -ஜெம்பட்டா வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

SHARE