24 மணிநேர வாடிக்கையாளர் சேவையினை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் ஆப்

210

குறுஞ்செய்திகளை பரிமாறும் முன்னணி செயலியான வாட்ஸ் ஆப் ஊடாக பணப்பரிமாற்றம் செய்யும் சேவையினை அந்நிறுவனம் இந்தியாவில் ஏற்கணவே அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை வழங்கும் முகமாக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவையினை அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இச் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. வாட்ஸ் ஆப் ஆனது இந்தியாவில் மாத்திரம் 200 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இவர்களுக்கு மின்னஞ்சல் ஊடாகவும், மொபைல் நம்பர் ஊடாகவும் குறித்த வாடிக்கையாளர் சேவையினை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE