முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு இடையில் வெகு விரைவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரம் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படும் என நம்பப்படுகின்றது.