தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்றிற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் தொடரப்பட்ட மற்றுமொரு மானநஷ்ட வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம், யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கஜநிதிபாலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி தனியார் பத்திரிகையில் தனக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவும் (LLCR) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடாத விடயங்களை உள்ளடக்கி அந்த பத்திரிகையில் வெளிவந்த உண்மைக்குப் புறம்பான செய்தி தொடர்பில் குறித்த பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி மானநஷ்ட வழக்கு தொடுத்திருந்தார்.
குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது டக்ளஸ் தேவானந்தா தரப்பில் சட்டத்தரணி அப்துல் நஜீம் ஆஜராகியிருந்ததுடன் குறுக்கு விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.