விண்வெளி குப்பைகளை அகற்றும் முதலாவது செயற்கைக்கோள் தயார்

211

விண்வெளியில் தங்கியிருக்கும் குப்பைகளை அவசியம் அகற்ற வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இதற்கான பல்வேறு முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக குப்பைகளை சேகரிக்கக்கூடிய செயற்கைக்கோள் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். ஒரே தடவையில் சுமார் 100 கிலோ கிராம் எடைகொண்ட குப்பைகளை அகற்றக்கூடிய வகையில் இச் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக இதனை பரீட்சிப்புக்கு உட்படுத்துவதற்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பு அதன் அருகில் உள்ள குப்பைகளை அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் செயற்பாடுகளைக் கண்காணிக்க விசேட கமெராக்களும், சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.

SHARE