தற்போது விஜய்க்கு ஜோடியாக சர்கார் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். பைரவா படத்தை தொடர்ந்து அவர் விஜய்யுடன் ஜோடி சேர்வது இரண்டாவது முறை.
இந்நிலையில் அவர் அடுத்து தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் முன்பு ஜோடியாக நடித்த நேனு லோக்கல் படம் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
Gowtam Tinnanuri என்ற இயக்குனர் தற்போது இந்த ஜோடியை மீண்டும் ஜெர்சி என்ற படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொண்டால் தெலுங்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.