துபாய் எஜமானின் வருகையும்…. தமிழனின் மகிழ்ச்சியும்

154

தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் என்பவர் பல ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகிறார்.

துபாயில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றும் கார்ஸ்( cars) நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் . இந்நிலையில் இவரது மகள் திருமணம் நேற்று கீழக்கரையில் நடைபெற்றது .

இவரின் அழைப்பை ஏற்று துபாயை சேர்ந்த இந்நிறுவனத்தின் (CEO) தலைமை செயல் அதிகாரி அப்துல்லா சுல்தான் அப்துல்லா அல் சப்பாஹ் மற்றும் அவருடைய நண்பர் துபாயிலிருந்து கீழக்கரை வருகை தந்து திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

தனது ஊழியரின் இல்ல திருமணத்திற்காக அவர் துபாயிலிருந்து கீழக்கரை வருகை தந்து தனது அன்பை தெரிவித்தது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE