என்னை சிறையில் அடையுங்கள்! நாமல்

189

பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம் 100 ரூபாவேனும் பணம் பெற்றிருந்தால் தன்னை தாராளமாக சிறையில் அடைக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விதரன்தெனிய பகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தம்மை நோக்கி விரல்நீட்டிய பலர் இன்று அலோசியஸின் சாராயத்தை விற்பனை செய்வதாகவும் நாமல் குறிப்பிட்டார். அலோசிஸிடமிருந்து பணம் பெற்ற ஒருசிலரின் பெயரே வெளியாகியுள்ளதென்றும், நல்லாட்சி அரசாங்கத்தில் மேலும் பல திருடர்கள் உள்ளனர் என்றும் நாமல் இதன்போது குற்றஞ்சாட்டினார்.

எனினும், தாம் நூறு ரூபாவேனும் அலோசியஸிடமிருந்து பெறவில்லை என்றும், அவ்வாறு பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் தன்னை சிறையில் அடைக்குமாறும் குறிப்பிட்டார்.ஆனால், அதற்கு முன்னர் அலோசியஸிடமிருந்து பணம் பெற்ற அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்குமாறும், அவர்களுடன் சேர்த்தே தன்னை சிறையிலடைக்க வேண்டுமென்றும் நாமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE