வடகிழக்கு மாகாணம் எதற்காக காவல்துறை அதிகாரங்களை கோருகிறது?

204

 

வடக்கு மாகாணம் 99 வீதம் தமிழ் பேசும் மக்களை வாழ்விடமாக கொண்டது. அது போன்றே கிழக்கு மாகாணமும் 87 வீதம் தமிழ் பேசும் மக்களை வாழ்விடமாக கொண்டது, இவ்வாறான நிலையில் 95 வீதம் பிற மாவட்டத்தை சேர்ந்த வேற்று மொழி பேசுபவர்கள் இங்கு கடமையாற்றும் போது நிற்சயமாக அந்த பணி சிறப்பாக அமையாது.

பாம்பின் கால் பாம்பே அறியும் என்ற கருத்துக்கு அமைய வடகிழக்கு மாகாண குக்கிராமத்திலிருந்து நகரத்தில் வாழும் அத்தனை வாழைகுலை கள்ளர்களிலிருந்து
வாடியில் வலை திருடறவன் உட்பட ஊரில் கஞ்சா இறக்குமதி செய்கிறவன் முதல்கொண்டு கசிப்பு காய்சிறவன் வீடு பிரித்து இறங்கிறவன் புதுசா உருவாகியுள்ள வாள்வீச்சு நபர்கள் அனைத்தும் அறிந்தவர்கள் வடகிழக்கில் வாழும் இளைஞர்களே.

எனவே மத்தியில் உள்ள காவல்துறை அதிகாரம் நமக்கு கிடைக்கும் போது அந்த தொழிலை செய்வதற்கு ஆர்வம் ஏற்படும், குறைந்தபட்சம் ஒரு காவல் நிலையத்துக்கு ஐம்பது வீதம் தமிழ் பேசும் இளைஞர்களை காவல்துறைக்கு இனைத்தால் ஒரு மாதத்தில் ஆவா வீவா எல்லாம் ஒன்றில் மத்திய கிழக்குக்கு நடையை கட்டும் வசதி இல்லாத கருமாந்திரங்கள் சிறைக்கு செல்லுங்கள்.

சரியாக மூன்று மாதத்தில் வடகிழக்கில் தெருபொறுக்கி முதல் தெருசண்டியர்கள் இல்லாத மாகாணமாக வடகிழக்கு மிளிரும்.

கப்பம் லஞ்சம் வாங்கும் காவல்துறையினரை தயவு தாட்சாயனம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும். வேலியே பயிரை மேய்வது மிகபெரும் குற்றமாகும்.

இவ்வாறான அதிகாரமிக்க காவல்துறை நம்மிடம் இருந்து தவறுகள் இடம் பெறுமானால் அதன் பின் முதல்வரை குற்றம் சுமத்தலாம்.

இங்கு தற்போது கடமையாற்றும் காவல் துறையினர் கூலிக்கு மாரடிப்பவர்கள் அவர்களுக்கு எமது பிரச்சனைகளை களைவதற்கு நேரமுமில்லை தேவையுமில்லை. ஊருக்கு இரண்டு விசுவாசமாக செயலாற்றும் காவல்துறை போதும் குற்றம் களைவதற்கு.

முடியுமானால் எதிர்க்கட்சி தலைவரே உங்கள் பதவிக்காலம் முடிவதற்குள் 13 ம் சட்டமூலத்தில் உள்ள காவல்துறை அதிகாரத்தை பெற்றுக்கொடுங்கள் பார்க்கலாம். நீங்கள் பெற்ற பதவியை போற்றுவதற்கு.

SHARE