25MP செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் Oppo Find X ஸ்மார்ட் கைப்பேசி

224

சிறந்த கமெராக்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வரும் நிறுவமான Oppo திகழ்கின்றது.இந்நிறுவனம் Oppo Find X எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் 29ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது. சீனாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 6.4 அங்குல அளவுடைய OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 845 Processor , பிரதான நினைவகமாக 8GB RAM, 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் 25 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 20 மெகாபிக்சல்கள் மற்றும் 16 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன. எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

SHARE