மாத்தறையில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி! பிள்ளைகளை தத்தெடுத்த வர்த்தகர்

159

அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்திற்கு பெருமளவு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியான சுரங்க பிரதிப்வீரசிங்கவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு 20 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை வர்த்தக சமூகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வருடம் பாடசாலை கல்விக்குள் நுழைய தயாராக இருக்கும் அவரின் மகளை, மாத்தறை சுஜாத்தா வித்தியாலயத்தில் சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கையை அமைச்சர் சாகல ரத்நாயக்க மேற்கொண்டுள்ளார்.

தற்போது மாத்தறை ஐ.டீ.எம் பாடசாலையில் கல்வி கற்கும் பொலிஸ் அதிகாரியின் மூத்த மகள் மற்றும் 3 வயதுடைய மகனின் கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும் வரை கட்டணம் எதுவும் அறிவிடப்பட மாட்டாது. இலவசமாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பாடசாலையின் அதிபர் கயானி தெரிவித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளுக்கும் ஆரம்ப பாடசாலையில் இருந்து பல்கலைக்கழக கல்வி நிறைவடையும் வரை ஏற்படும் செலவுகளையும் பொறுப்பேற்பதாக ஏ.எஸ்.பி கூட்டு வர்த்தகத்தின் தலைவர் கிரிஷாந்தி ஜீவந்தி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக மாத்தறை பொலிஸ் அதிகாரிகளினால் 10 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE