ஐ.நாவில் தமிழர் – சிங்களவர் இடையில் உக்கிர தர்க்கம்

167

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அறையில் இடம்பெற்ற கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்து கொண்டிருந்த சிங்கள பிரதிநிதிகள் மற்றும் தமிழர் பிரதி நிதிகளிடையில் இடம் பெற்ற தர்க்கத்தில் ஒரு சிலர் வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இதன் பக்க அறையில் கூட்ட தொடர் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது சிங்கள பிரதிநிதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அத்துடன் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் “நீங்கள் கொலைகாரர்கள்” என தெரிவித்தது அங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பலர், சிங்கள பிரதிநிதிகளை வெளியில் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/t0mVqmMq-ko

 

SHARE