தமிழ் படம் 2 படத்தில் சிவாவின் அறிமுக பாடல் வெளியானது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்
பணிகள் நடப்பதாக சொல்லிவிட்டு நடப்பு சம்பவங்களை கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் துவங்கியபிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்டில் நடந்த வெங்காய பிரச்சனையையும் தமிழ்படம் டீம் விட்டு வைக்கவில்லை.
சுனாமியின் பினாமியே என துவங்கும் இப்பாடலில் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என மெர்சல் விஜய் போல சைகை காட்டுகிறார் சிவா. பின் பீட்டா வந்தா எனக்கென்ன, மீத்தேன் எடுத்தா எனக்கென்ன வாயே திறக்க மாட்டேன் என பாடுகிறார் சிவா.
வர்லாம் வர்லாம் வா வர்லாம் வர்லாம் வா என அடுத்து பைரவாவை கலாய்த்திருக்கிறார். தொடர்ந்து இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் என சூர்யாவையும் விட்டுவைக்கவில்லை.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நான் யுஎஸ் கிளம்பி போய்விடுவேன் என கமலை கலாய்த்துள்ளனர். கடைசியாக புலி இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை புகழ்ந்த டி.ஆர். பேச்சையும் கலாய்த்துள்ளார்கள்.