அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை: ட்ரம்பின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

204

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் சில நாடுகளை சேர்ந்த மக்கள், அமெரிக்காவில் நுழைய தடை விதித்து ட்ரம்ப் அரசு பிறப்பித்த உத்தரவை, உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக பதிவியேற்ற டொனால்டு ட்ரம்ப், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான், வடகொரியா, ஏமன், சிரியா, வெனிசுலா, லிபியா, சோமாலியா, சாட் ஆகிய நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அந்நாட்டு தலைவர்கள் மட்டுமே அமெரிக்காவில் நுழைய முடியும் எனவும் அறிவித்தார். ட்ரம்பின் இந்த திடீர் அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றங்கள் ட்ரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், ட்ரம்ப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கினை, தலைமை நீதிபதியின் தலைமையில் விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என தீர்பளித்துள்ளனர். இதனை வரவேற்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “WOW” என பதிவிட்டுள்ளார்.

SHARE