இன ஒற்றுமையை மேம்படுத்த முல்லைத்தீவில் படையினரின் முயற்சி..!

175

முல்லைத்தீவு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு மக்களிடையே இன ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ராஜகுரு, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், இலங்கை போதிராஜய நிறுவனத்தின் தலைவர் ஒமல்பே சோபிதநாயக தேரர் மற்றும் பிரதேச அதிகாரிகள் படைத்தளபதிகள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

SHARE