பலருக்கும் மாங்காய் பார்த்ததுமே நாவில் எச்சில் ஊறும், ஆனால் சூடு என்பற்காக பலரும் தவிர்ப்பார்கள். உங்களுக்கு தெரியுமா? மாங்காயில் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. மாங்காயை அதிக உடல் எடையை கொண்டவர்கள் தினமும் சாப்பிடலாம், இதனால் விரைவில் உடல் எடை குறையும். மாங்காய் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து சிறந்த நிவாரணம் தரக் கூடிய ஒரு உணவுப் பொருளாகும். எனவே அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், உடனே மாங்காய் சாப்பிடலாம். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் அதிகமான சோர்வு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிட்டால் நல்ல தீர்வுகள் கிடைக்கும். மாங்காய் உடலின் எனர்ஜியை அதிகரிக்கிறது. எனவே இந்த மாங்காயை நம்முடைய மதிய உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால், மதிய வேளையில் ஏற்படும் அரைத்தூக்க நிலையில் இருந்து விடுபடலாம். மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலில் ஏதேனும் பாக்டீரியல் தொற்றுக்களை சரிசெய்து, குடலை சுத்தப்படுத்துகிறது. எனவே மாங்காய் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மாங்காயில் உள்ள விட்டமின் C சத்துக்கள், நமது உடம்பின் ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரித்து, புதிய ரத்தணுக்களின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது. மேலும் வியர்குருவை தடுத்து, அதிக வெயிலால் ஏற்படும் பிரச்சனையையும் தடுக்கிறது. இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது, இதில் உடலில் எலக்ட்ரேலைட் அளவை பராமரிக்க உதவுவதுடன் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்து இதயநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
மாங்காயை உப்பு மற்றும் தேனில் தொட்டு சாப்பிட்டு வருவதால், மலச்சிக்கல் பிரச்சனை உடனே நீங்கி விடும். அதேபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மாங்காய் சாப்பிடுவதன் மூலம், பற்களின் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம், பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை தடுத்து பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்குவகிக்கிறது, எனவே மாங்காய் சாப்பிடுவதால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதுடன் முதுமையும் தள்ளிப்போகும், அத்துடன் முகத்தில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தேங்குவதை தடுக்கிறது.