சுரைக்காய் ஜூஸை குடித்தால் மரணம்? அதிர்ச்சி தகவல்கள்

162

புனேவை சேர்ந்த 41 வயது பெண்மணி ஒருவர் தனது உடல்நலம் மீது அதிக அக்கறை கொண்டவர். தினமும் உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மிகவும் ஆரோக்கியமான உடல்நிலையுடனும், எந்தவித மருத்துவ ரீதியான பிரச்சனைகளும் இல்லாத இவர், கடந்த ஜூன் 12ஆம் திகதி வழக்கம்போல உடற்பயிற்சி முடித்துவிட்டு ஒருகப் சுரைக்காய் ஜூஸை குடித்துவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். சுரைக்காய் ஜூஸை குடித்த அரை மணிநேரத்திலேயே இவருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சுயநினைவை இழந்ததோடு இருதய அடைப்பும் ஏற்பட்டது. அடுத்த இரண்டு நாட்கள் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

 

சுரைக்காய் ஜூஸ் பருகுவது உயிரைப் பறிக்குமா?

சில தாவரங்கள் தங்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள விஷத்தன்மைக்கான மூலக்கூறுகளை கொண்டிருக்கும். அப்படி விஷத்தன்மை கொண்ட தாவர இனம் தான் வெள்ளரிக் குடும்ப வகை தாவரங்கள்.

இந்த வகை தாவரங்களில் இருக்கும் டெட்ராசிகிளிக் டிராட்டர்ஸ்பிராய்ட் (Tetracyclic triterperiod) எனப்படும் உயிர்வேதி மூலக்கூறுகள்தான் விஷத்தன்மைக்கு காரணம். இது வெள்ளரிக் குடும்பத்தில் குகர்பிடாசின்ஸ் (Cucurbitacins) எனப்படுகிறது.

இந்த குகர்பிடாசின்ஸ்தான் குறிப்பிட்ட காய்கள் கசப்பாகவும் விஷத்தன்மையாகவும் இருப்பதற்கான காரணம். இயற்கையாகவே இது தாவரங்களில் உற்பத்தியாகிறது.

சாதரணமாக நாம் சாப்பிடும் சுரைக்காயில் குகர்பிடாசின்ஸ் B, D, G, H வகைகளின் மொத்தம் 130 ppm மூலக்கூறு அளவை தாண்டாது.

ஆனால் இந்த அளவைத் தாண்டினால், அந்த சுரைக்காய் விஷத்தன்மையாகவும் கசப்பாகவும் மாறிவிடும். ஆக அதிகளவிலான குகர்பிடாசின்ஸ் அதிக சகப்பாகவும் கடுமையான விஷமாகவும் இருக்கும்.

SHARE