உலகக்கோப்பை கால்பந்து போட்டி! தமிழ் மாணவி ஏற்படுத்திக்கொடுத்த கௌரவம்

176

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் துவக்கத்தின் போது பந்தை கால்பந்து வீரர்களுக்கு எடுத்து கொடுக்கும் நிகழ்விற்காக கோத்தகிரியை சேர்ந்த பள்ளி மாணவி லதான்யா ஜான் தெரிவாகியுள்ளார். இதற்காக 1600க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில பல்வேறு கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கோத்தகிரியை சேர்ந்த லதான்யாவும் ஒருவராவார்.

இதனையடுத்து அவர் பிரேசில் அணி விளையாடிய போட்டியின் துவக்கத்தில் பந்தை எடுத்து கொடுத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதனால் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு கெளரவத்தை ஏற்படுத்திய லதான்யாவிற்கு கோவையில் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

SHARE